3,200 ஆண்டுகள் பழமையான தமிழ் கறியினை மீட்டெடுப்போம்!
மறக்கப்பட்ட உண்மை. திருடப்பட்ட பாரம்பரியம். இன்று நெருக்கடியில் தவிக்கும் “தமிழர் கறி”யை மீட்டெடுக்க, உங்களின் பேராதரவு தேவை.


முன்னர் சொல்லப்படாத, மிகவும் அரிய தமிழர் கறியின் உண்மை வரலாறையும், அதன் நவீன மறுமலர்ச்சியையும் இந்த வீடியோவில் அறிந்து கொள்ளுங்கள்.
👉 உங்கள் மனத்தில் இருக்கும் சந்தேகங்களை தெளிவாக்க, 👉 உண்மையான தமிழர் கறியின் வரலாற்றை ஆழமாகப் புரிந்து கொள்ள, 👉 "கறி" என்பது உலகின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று — ஆனால் நமது சொந்தமானது என்பதை உணர்ந்து, பெருமிதம் கொள்ள, 👉 மேலும், நெருக்கடியில் சிக்கிய எம் கறியை மீட்டெடுக்க, ஒரு சிறந்த பங்கு வகிக்க...
உங்கள் ஆதரவு நமக்குத் தேவை. இந்த நிகழ்வில்,
🌶️ ஊர்காவத்துறை (Kayts) தீவில், 500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்-போர்த்துகீசிய கூட்டு முயல்வில் உருவான உலகின் முதல் கறித் தூள் பற்றிய மறைக்கப்பட்ட வரலாறையும்,
🍵 ஐரோப்பியர்களால் காலனித்துவ காலத்தில் பரவலாக ரசிக்கப்பட்ட சுக்கு காபி குறித்த தகவல்களையும்,
இவை இன்று பிரிட்டன் சந்தைக்கு எவ்வாறு மீண்டும் அறிமுகமாகின்றன என்பதைப் பகிர்கிறோம்.
மேலும், நிகழ்வின் முடிவில்,
✅ உண்மையான தமிழ் கறித் தூள்
✅ சுக்கு காபி
இவற்றை பிரிட்டனின் ஒரு முன்னணி சூப்பர்மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நோக்குடன், மிகவும் கடுமையான தரத் தகுதிகள் மற்றும் சுகாதாரச் சோதனைகளை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிக்கப்படும் முதல் தொகுப்பை, தாமத விநியோகம் (Delayed Delivery) முறையில் பெறுவதற்கான வாய்ப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.
SAVE THE CURRY
எமது கறியினை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க,பேராதரவு தாருங்கள். இது ஒரு விழிப்புணர்வுச் செயல்பாடு.

கறியின்உண்மை தெரியட்டும்
இப்போது இல்லையெனில், எப்போதும் இல்லை — தமிழ் கறியின் உண்மை வரலாறு உலகம் அறிய வேண்டிய தருணம் இது.

இனமாக திரண்டு எழுவோம்
நம் குரலை உலகம் கேட்கும் வகையில் ஒன்றிணைந்து குரலெழுப்புவோம். இது உணவுக்கும், நம் பாரம்பரியத்திற்குமான எழுச்சி.

மறைக்கப்பட்ட வரலாற்று!
'கறி' - தமிழ் சொல். இதை லவட்டிக் கொண்டு போனவர்கள், நெருக்கடியில் சிக்கியதும், கை விட்டு செல்கிறார்கள். தூக்கி மீட்டெடுப்பது — நம் கடமை!

உணவு. பாரம்பரியம். எதிர்காலம்.
இன்றே காப்போம் எங்கள் தமிழ் கறியை — அது நாளை எம் தலைமுறையில், உயிருடன் வாழட்டும்.
🫏 நெடுந்தீவின் காட்டுக் குதிரைகள் – மனிதாபிமானத்திற்கு ஒரு சவால்!
நெடுந்தீவின் (Delft Island) காட்டுக் குதிரைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் வரலாற்றின் மறக்கப்பட்ட பக்கம் தெரியுமா?
இவை ஐரோப்பிய காலனித்துவத்தின் எச்சமாகவும், மனிதர்களின் நன்றி மறந்த செயலின் அவலச் சின்னமாகவும் நம்மிடையே தவிக்கும் உயிர்கள்.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மோட்டார் வாகனங்கள் வந்தபோது, இந்தக் குதிரைகள் தேவையற்றவையாகக் கருதப்பட்டு, லாயத்திலிருந்து வெளியே திரத்தப்பட்டன.
இன்று அவற்றின் வாரிசுகள், பாதுகாப்பின்றி, குடிக்கக்கூடிய தண்ணீரின்றியும், கடல் நீரைத் தாகம் தீர்க்க முயலும் விலங்குகளாகவே வாழ்கின்றன.
அழிந்துவரும் இந்த உயிர்களை காப்பது, தமிழர் தார்மீக நெறியின் ஒரு மறுக்க முடியாத கடமையல்லவா?
📽️ இந்த Webinar-இல், இந்தக் குதிரைகள் குறித்த உண்மைகளையும், அவை தமிழர் பாரம்பரியத்துடன் கொண்டுள்ள ஆழமான தொடர்பையும் அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பாதுகாக்க எமது முயற்சிக்கு, உங்கள் பேராதரவைத் தாருங்கள்.


தாகம் தீர்க்குமா கடல் நீர்?

சிதைந்த ஒவ்வொரு தூணும், ஒரு காலத்தில் ஐரோப்பியர்களுக்குச் சேவையாற்றிய, கம்பீரக் குதிரைகளின் அமைதியான வரலாற்றை காற்றில் முழங்குகின்றன.
மிளகாய்க்கு முந்தியதும், பிந்தியதும் எனும் கறியின் பரிணாமம்,அதை வெறும் வணிகமாகவே பார்த்தவர்களுக்குத் தெரியாமல் போனது. அதனால்தான் இன்று, கறி நம்பகத்தன்மையை இழந்து, நெருக்கடியில் தவிக்கிறது - ஏனெனில், அது அவர்களின் பாரம்பரியம் அல்ல… நமது பாரம்பரியம்.

✅ 3,200 வருடங்களுக்கு முந்தைய தமிழ் கறியின் உண்மை வரலாறு
✅ ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மிளகாய், தமிழ் பாரம்பரியத்தில் உருவான கறித்தூள்
✅ பிரிட்டனில் உருவாகியுள்ள கறி நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வு
✅ நெடுந்தீவின், காட்டுக் குதிரைகளின் வரலாறும், ஐரோப்பியர் கொண்டு வந்த தென் அமெரிக்க மரக்கறிகள்
✅ உங்கள் பேராதரவால் எப்படி இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும் என்பது

Register Now
How to Easily Set-up, Optimize, and Customize Your Website!