பிபிசி (BBC), English Breakfast-ஐ ‘British Breakfast’ என்றோ, Scottish Haggis-ஐ ‘British Haggis’ என்றோ சொல்லத் துணியாது.
ஏனெனில் அவர்கள் வெகுண்டெழுவார்கள் என்பது பிபிசிக்கு தெரியும்.
ஆனால் தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகால ‘கறி’ மட்டும் எப்படி ‘Indian Curry’ ஆகி, இன்று ‘British Curry’ என மாறியது?
தமிழர்கள் கண்டும் காணாதது போல அமைதியாகக் கடந்து போவார்கள் என்று பிபிசி தப்புக் கணக்கு போட்டதா?
கறி நெருக்கடியினை (Curry Crisis) ஆழமாகப் புரிந்துகொண்டு, எமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவும் சிறு கையேட்டினை இலவசமாகப் பெற்றிடுங்கள்.
English Video Below ↓
எந்த விற்பனையும் இல்லை | எந்த அரசியலும் இல்லை | தமிழ் மரபு மட்டுமே.


“பிரிட்டிஷ் கறி நெருக்கடி” குறித்து முன்னணி ஊடகங்கள் பல காரணங்களை முன்வைத்தாலும்,
அதன் உண்மையான வேர் இதுதான்:
“தாம் செலுத்தும் பணத்திற்கு உரிய தரமும்,உண்மையான கறியின் அடையாளமும்இன்று சந்தையில் இல்லை”
என்ற அவநம்பிக்கை, நவீன தகவல் யுகத்தில் கறிப் பிரியர்களிடையேஆழமாக உருவாகியுள்ளது.
அப்படியானால் எழும் கேள்வி இதுதான்:
அந்த ‘உண்மையான கறி’ யாரிடம் உள்ளது — தமிழர்களைத் தவிர?
இதனை உலகுக்குச் சொல்ல, மற்றவர்களுக்கு கறியின் வரலாறு தெரியவில்லை.
ஆனால், கறியின் பல்லாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கையில் வைத்திருக்கும் நாம்,
இன்னும் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனமா?
இந்த ஆய்வுகளின் சாரமாகவும், நமது கறியின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லவும் நான் எழுதிய நூல்:
‘Curry Heritage of the Tamils - A brief history of Curry’
(தமிழர்களின் கறிப் பாரம்பரியம் - ஒரு சுருக்கமான வரலாறு)

16-ம் நூற்றாண்டு: போர்த்துக்கேயர் வழி ஆங்கிலத்திற்குச் சென்றவை: ஐரோப்பியர்கள் நமது நிலத்திற்கு வந்தபோதே நமது உணவின் தனித்துவத்தைக் கண்டு வியந்தனர். அன்று முதல் ஆங்கில அகராதியில் இடம் பிடித்த தமிழ் சொற்கள்:
கறி (Curry), கஞ்சி (Congee), பப்படம் (Poppadom), மிளகுத்தண்ணி, (Mulligatawny), ரசம் (Rasam), மாங்காய் (Mango)
2025-ம் ஆண்டு: நவீன அங்கீகாரம் பல நூற்றாண்டுகள் கழிந்தும் நமது உணவு இன்னும் உலகை ஆளுகிறது. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு (Oxford) போன்ற அகராதிகளில் அதிகாரப்பூர்வமாக இணைந்தவை:
கொத்து ரொட்டி (Kothu Roti), வட்டில் ஆப்பம் (Watalappam) - Koththu Roti™ | Wattila™
Understand the £5 Billion Curry Crisis.
Get the free handbook and help us restore our ancient legacy.